தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில், மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றிருக்கும் மீனவர்கள் தொடர்பில் தேடியறிந்து அவர்களைப் பாதுகாப்பாகக் கரை சேர்ப்பதற்கு அவசியமான வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் அரச அதிகாரிகளுடன் இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
அந்தவகையில், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.