ரம்புக்கனை சம்பவத்தில் 15 வயது சிறுவனுக்கும் துப்பாக்கிச்சூடு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கேகாலை, மே 02

ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது 15 வயதுடைய சிறுவன் ஒருவரும் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அறிக்கை கோருவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ரம்புக்கனையில் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts