வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு வண்டி – 7 பேரின் சடலங்கள் மீட்பு!

முக்கிய செய்திகள் 2

காரைதீவு – மாவடிபள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டியொன்று அடித்துச் செல்லப்பட்டதையடுத்து காணாமல் போனவர்களில் இதுவரையில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நிந்தவூர் பகுதியிலிருந்து சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உழவு வண்டியொன்று நேற்று முன்தினம் இரவு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

சம்பவத்தின்போது, அதில் 14 பேர் பயணித்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காரைதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், காணாமல் போயிருந்தவர்களில் ஐவர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டதுடன், நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்தநிலையில் குறித்த உழவு வண்டியின் சாரதியும் அவருடன் பயணித்த அவரது நண்பர் ஒருவரும் இன்று காலை (28) சடலமாக மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மற்றுமொரு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரையில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு சிறுவன் தொடர்ந்தும் தேடப்படுகின்றார்.

Trending Posts