பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வடமராட்சிக்கு விஜயம்

முக்கிய செய்திகள் 2

சீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சி பகுதியில் அதிக பாதிப்புக்கு உள்ளான புனிதநகர்ப் பகுதிக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று (28) திடீர் விஜயம் மேற்கொண்டு கள நிலவரம் தொடர்பில் ஆராய்ந்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த கற்கோவளம் மெதடிஷ்த மிஷன் அ.த.க.பாடசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொண்டா வெள்ள நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன் போது இப்பகுதியில் ஏற்பட்ட இடர்பாடு தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குத் தான் கொண்டு செல்வதாகப் பொதுமக்களிடம் அவர் உறுதியளித்துள்ளார்.

Trending Posts