கொழும்பு,மே 02
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான ஹந்தபான்கொட ஹந்தாய என்பவரின் உதவியாளர் ஒருவரும் பெண்ணொருவரும் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோமாகம ககா (Gaga) என அறியப்படும் பெண்ணொருவரும் அவருடன் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 27 வயதுடைய வட்டரக்க சஞ்சு என்ற இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதாந்தம் 35,000 ரூபா என்ற வாடகை அடிப்படையில் அத்துருகிரிய - கஹன்தொட பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் அங்கு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது வீட்டின் பின்புறத்தில் இருந்து டி-56 ரக துப்பாக்கி ஒன்றையும் அதற்கு பயன்படுத்தப்படும் 30 தோட்டக்களையும் பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.