ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்காக வேலையற்ற பட்டதாரிகள் குழு

முக்கிய செய்திகள் 2

ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்காக வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று இன்று (29) ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துள்ளது.

அங்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் குழுவினருக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக தற்போதைய ஜனாதிபதி பதவியேற்கும் முன்னர் உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் குழு ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கான திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Posts