
கொழும்பு,மே 02
ஜனாதிபதி அலுவலகத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம பதாகைகளை அகற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பொலிஸாரின் முயற்சியால் கோபமடைந்த போராட்டக்காரர்கள், பொலிஸாரின் வாகனத்தை முற்றுகையிட்டு அவர்களை வெளியேறுமாறு தெரிவித்தனர்.
ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் ஒரு மேடையை அமைப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்ததாக உயர் பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதைத் தவிர்க்குமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகத் தடுப்புப் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
இதேவேளை அலரிமளிகையினும் நாடளாவிய ரீதியிலும் தற்போது போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.