தலைமன்னாரில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கேசாலே, சிரிதோப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24, 28, 29 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 06 கிலோ 120 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Posts