
இந்தியாவிலிருந்து 70,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு விநியோகத்தர்களிடம் இருந்து விலைமனு கோரப்பட்டு வருவதாக லங்கா சதோச நிறுவனத்தின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (29) முதல் 7 நாட்களுக்குள் விநியோகத்தர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அடுத்த மாதம் அரிசியை நாட்டுக்கு இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் சமித பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.