டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய வீரர்களின் ஐபிஎல் 2025 சம்பளம் எவ்வளவு தெரியுமா?

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பெருமளவு எதிரொலித்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களை பல்வேறு அணிகளும் அதிக தொகை கொடுத்து வாங்கின.

அந்த வகையில், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் சமீபத்திய ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எந்த தொகைக்கு எடுக்கப்பட்டனர் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் ஏல வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். ஐபிஎல் 2025 தொடரில் விளையாட ரிஷப் பண்ட்-க்கு சம்பளம் ரூ. 27 கோடி ஆகும். இவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

இவரைத் தொடர்ந்து ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா முறையே ரூ. 16.5 கோடி மற்றும் ரூ. 18 கோடி சம்பளம் பெற உள்ளனர். இதில் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், ஹர்திக் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ரூ. 21 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ்-க்கு ரூ. 16.35 கோடி சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரூ. 18 கோடியை பெறுகிறார். ரோகித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் முறையே ரூ. 16.30 கோடி மற்றும் ரூ. 18 கோடியை சம்பளமாக பெறவுள்ளனர்.

அக்சர் பட்டேல் ரூ. 16.50 கோடி, குல்தீப் யாதவ் ரூ. 13.25 கோடி, யுஸ்வேந்திர சாஹல் ரூ. 18 கோடியை ஊதியமாக பெறுகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் முறையே ரூ. 18 கோடி, ரூ. 12.25 கோடியை பெறுவர்.

Trending Posts