
கொழும்பு, மே 2: அவசரகால எரிபொருள் இருப்புக்களை கொள்வனவு செய்வதற்காக 200 மில்லியன் டொலர் இந்திய கடனுதவி நீடித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், 500 மில்லியன் டொலர் கடன் வரியை நீடிப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்தியாவிடம் இருந்து இலங்கை, உணவு மற்றும் எரிபொருள், எரிவாயு தேவைக்காக பல பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.