ஒரு வாரத்தினுள் தீர்வை எட்டுமாம் வடக்கு..

சிறப்புச் செய்திகள் செய்திகள்

வடக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பிற்குள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இவ்வார இறுதிக்குள் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது.

குறித்த சந்திப்பானது எதிர்வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் நீடித்துவரும் சர்ச்சைக்கு தீர்வு காண்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வடக்கு மாகாண சபையினுள் இடம்பெறும் சம்பவங்களுக்கு தாமே முழுக்காரணம் என்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தாக குரல் பதிவு வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.