இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கலந்து கொண்ட  கூட்டு கடற்பயிற்சி நிறைவு!

உலகச் செய்திகள்

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படையினரின் கூட்டு கடற்பயிற்சி நேற்று முன்தினத்தடன் (17.07.2017) நிறைவு பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன.

வங்கக்கடலில் இடம்பெற்ற இந்த கூட்டுப்பயிற்சி இரண்டு வருடடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்று வருகின்றது.

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் இடம்பெறும் இப்பயிற்சிக்கு ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான பயிற்சி கடந்த 7 ஆம் திகதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்துள்ளது.

இறுதி தினத்தன்று சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 150 கடல் மைல் தொலைவில்; இக்கூட்டு கடற்பயிற்சி இடம்பெற்றது.

இதில் ஐ.என்.எஸ். எனப்படும் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி போர்க்கப்பலகளான் விக்கிரமாதித்யா, ரன்வீஜய், ஷிவாலிக், சயாத்திரி, ஜோதி, கமோட்டா மற்றும் கிர்பான் ஆகியன பங்கேற்றுள்ளன.

அதேவேளை உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் (சி.வி.என்-68), ஏவுகணைகளை வழிநடத்தும் கப்பல் உள்ளடங்களானவையும் பங்கேற்றன.

இவற்றுடன் ஜப்பான் நாட்டு கடற்படையில் உள்ள சுய பாதுகாப்பு படை கப்பல் ஜெ.எஸ். இஜிமோ (டிடிஎச்- 183). ஜெ.எஸ்.சஜாநமி (டிடி113) ஆகிய கப்பல்களும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.