ஐ. நா. வின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் சம்பந்தன் நாளை சந்திப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாளை (21.07.2017) சந்தித்து பேசவுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமாக நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்த ஜெஃப்ரி ஃபெல்ட்மன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்தோடு, கிழக்கிற்கு விஜயம் செய்திருக்கும் அவர் ஆளுநர் ரோஹித போகொல்லாகம மற்றும் முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார்.

இந்நிலையிலேயே நாளைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசவுள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கபப்டுகின்றது.