வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வழியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இரு பிரதான கட்சிகளும் இணைந்து வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமது வேறுபாடுகளை களைந்து செயற்படுவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியான புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

இதனை அவசியமில்லை என்பதாக மகாநாயக்க தேரர்கள் தெரிவித்திருந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வாக்குறுதி அளித்தமைக்கு அமைவாக புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.