கிளிநொச்சியில் 24,000 குடும்பங்கள் பாதிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தற்போது நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 24,000 குடும்பங்களைச் சேர்ந்த 83,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வரட்சியை எதிர்கொள்வது தொடர்பான விஷேட கூட்டத்தின் போதே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன், கரைச்சி பிரதேச செயலகத்திலுள்ள 42 கிராம அலுவலகர்கள் பிரிவுகளில் 9327 குடும்பங்களைச் சேர்ந்த 32632 பேரும், கண்டாவளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த 16 கிராம அலுவலகர் பிரிவுகளில் 5767 குடும்பங்களைச் சேர்ந்த 20181 பேரும், பூநகரி பிரதேச செயலகத்தில் 19 கிராம அலுவலகர் பிரிவில் 5354 குடும்பங்களைச் சேர்ந்த 18654 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 18 கிராம அலுவலகர் பிரிவுகளில் 3464 குடும்பங்களைச் சேர்ந்த 11624 பேரும் இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக மாவட்ட செயலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, 32 கிராமங்களிலுள்ள 3914 குடும்பங்களுக்கு பிரதேச சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களினால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.