காணாமல் போனோரது விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகண்டுஇ அவர்களது உறவினர்களது நம்பிக்கையை கட்டியெழுப்புவது உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோலும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றைஇ நேற்று (25) நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாகஇ கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களையும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.

இரகசிய தடுப்பு முகாம்களில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்து வரும் நிலையில்இ குறித்த முகாம்களை பார்வையிட உறவினர்களுக்கு அனுமதியளிக் வேண்டும்.

காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை உடன் அமுலுக்கு கொண்டுவருதல் வேண்டும்

ஆகிய நான்கு விடயங்களையும் உடன் செயற்படுத்துவது அவசியம் என எதிர்கட்சித் தலைவர் தமதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளைஇ காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்இ தீர்வுக்கான சகல செயற்பாடுகளும் வெற்றியடைவதற்கும்இ நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அதனை துரிதப்படுத்துவது மிகவும் அவசியமானதெனவும் சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.