ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் – 26 படையினர் பலி

உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் கந்தகஹார் பகுதியில் இராணுவ முகாம் ஒன்றினுள் புகுந்து தலிபானியர்கள் நடத்திய தாக்குதலில் 26 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது.

அத்துடன், மேலும் 13 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, கந்தஹாரின் காக்ரெஸ் பகுதியிலுள்ள குறித்த முகாம் தற்போது தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக தலிபானியர்கள் அறிவித்துள்ளனர்.

அண்மைக்காலங்களில் இராணுவத்துக்கு எதிரான தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் இராணுவம் பெரும்பாலும் தோல்வி கண்டு வவருவதாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.