இலங்கை – ஜப்பான் இடையேயான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது!

செய்திகள்

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பணிப்பெண்களின் நலன்கருதி புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைசாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இவ் உடன்படிக்கை(26) கைசாத்திடப்பட்டது.

ஜப்பான் நாட்டின் சர்வதேச மனித வள அபிவிருத்தி (M JAPAN ) நிறுவனத்துக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கும் இடையில் இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

சர்வதேச மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் Kyoki Yanagisawa வும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரலவும் இவ் ஒப்பந்ததில் கைசாத்திட்டனர்.

அதற்கமைய இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பான் நாட்டில் தொழில் பயிற்சினை பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2017 நவம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் இவ் ஒப்பந்ததின் மூலம் 5 வருடங்கள் ஜப்பானில் தங்கியிருந்து தொழில்பயிற்சியினை பெறமுடியும். பயிற்சிகாலத்தில் சிறிய கொடுப்பனவொன்றினையும் வழங்குவதாகவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிற்சிகள் அனைத்தும் ஜப்பான் அரசாங்கத்தின் தொழிலாளர் அமைச்சின் மேற்பார்வையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர், பணியகத்தின் செயலாளர், சர்வதேச மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.