போரினால் அழிவடைந்த பிரதேசங்களை வளம் மிக்கதாக மாற்ற வேண்டும்

செய்திகள்

கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் (26) கிளிநொச்சியில் நடைபெற்றது.

அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிராந்திய பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 56 பயிற்சியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு, குண்டசாலை பகுதியில் கரந்தகொல்ல என்ற இடத்தில் 2 வருடங்களுக்கு வேதனத்துடனான பயிற்சி இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, போரினால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ள பிரதேசத்தை வளங்கொழிக்கும் ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கும், பசுமை நிறைந்த ஒரு பூமியாக மாற்றுவதற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வடமாகாண முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார்.