நாட்டு மக்களின் நலனுக்காக எந்த முடிவையும் எடுக்க தயார்!

செய்திகள்

மக்களின் நலனை உறுதி செய்ய எடுக்கக்கூடிய உச்சகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இப்பாகமுவ அல் ஹமதீயா பாடசாலையில் (26) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு சில ஊழியர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கை பற்றி தெரிந்து கௌ்ளாது செயற்படுகின்றனர்.

ஒரு அங்குலம் காணியையேனும் வெளிநாட்டவருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போவதில்லை என உறுதியிட்டு கூறுகின்றேன்.

புரிந்துணர்வின் செயற்படும் சிலருக்காக நாட்டு மக்கள் நெருக்குதல்களை எதிர்நோக்க அனுமதிக்க முடியாது.

எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு தொழில்களை இழக்காது பணியாளர்கள் கடமைக்கு திரும்ப வேண்டும்” என ஜனாதிபதி கோரியுள்ளார்.