இலங்கையருக்கு தென் கொரிய அரசு விருது வழங்கி கௌரவிப்பு!

செய்திகள்

தன் உயிரைப் பணயம் வைத்து பெண் ஒருவரைக் காப்பாற்றிய இலங்கையருக்கு தென் கொரிய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்ந்த ஹசலக மினிபே நிமலசிறி பண்டார என்பவர் தென் கொரியாவில் தொழிலுக்கு சென்ற ஒருவராவார்.

இவர் தென் கொரிய நாட்டவர் உட்பட பல வெளிநாட்டவர்கள் பார்த்து கொண்டிருக்கும் போது தீப்பற்றிய வீட்டின் பின் பக்க கதவினால் சென்று வயோதிப பெண் ஒருவரை காப்பாற்றியிருந்தார்.

இச்சம்பவம் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி பகல் 1.10 மணியளவில் இடம்பெற்றது.

இதன் போது நிமலசிறி பாரிய தீக் காயங்களுக்குள்ளாகியிருந்தார்.

இந்த இலங்கையரின் துணிச்சலான செயலைப் பாராட்டியே தென்கொரிய அரசு அவருக்கு சிறப்பு விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.