அதி நவீன போர்க்கப்பல் விரைவில் ஜனாதிபதியால் கையளிப்பு

செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதி நவீன போர்க்கப்பலை  எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இலங்கை கடற்படையில் 67 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை கடற்படையின் முதலாவதாக கொள்வனவு செய்யப்பட்ட யுத்தக் கப்பலாகும்.

இதேபோன்று இந்தியாவில் வெளிநாட்டு கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட பாரிய யுத்த கப்பலாகவும் இது அமைந்துள்ளது.

கடற்படையினரின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் கோவா கப்பல் தயாரிப்புப் பிரிவில் இந்த ஆழ்கடல் கண்காணிப்புக்கான கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலை கடற்படையினர் சம்பிர்தாயங்களுக்கு அமைவாக வரவேற்றனர்.

18 அதிகாரிகளுக்கும்,100 கடற்படையினரும் பணியாற்றக்கூடிய வசதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.