வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

செய்திகள்

நாட்டின் பல மாவட்டங்களில் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த உலர் உணவுப் பொருட்களை விரைவாக உரியவர்களுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அப்பிரதேச மக்களுக்கான குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளிடம் பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.