கொழும்பு துறைமுகத்தின் எந்தவொரு பகுதியும் விற்கப்படமாட்டாது

செய்திகள்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு தரப்பிற்கும் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த பகுதி எந்தவொரு தரப்பிற்கும் விற்கவோ குத்தகைக்கு விடப்படவோமாட்டதென ஜனாதிபதி தெரிவித்துள்ள இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லையென துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.