பொறுமை காக்குமாறு தமிழர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் தம்முடன் பொறுமையாக இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் ஜனாதிபதி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும். ஆனால் இதற்கு காலநிர்ணயத்தை மேற்கொள்ளும் விடயத்திலேயே படைத்தரப்பினரால் உறுதியாக எதனையும் கூற முடியாத நிலை இருக்கின்ற போதிலும், மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு படைத்தரப்பினர் தமக்கு உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதியுடன் இந்த விடயம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துமென இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.