சஷி வீரவன்சவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,மே 31

குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு பொய்யான தகவல்களை முன்வைத்து முறையற்ற விதத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை, அதனை உடன் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் அவருக்கு இரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் அதற்கு எதிராக அவர் முன் வைத்துள்ள மேன் முறையீட்டை அடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேன் முறையீட்டு கோரிக்கையை இன்று பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க இதற்கான உத்தரவை அறிவித்தார்.

அதன்படி 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல இதன்போது நீதிமன்றம் அவருக்கு அனுமதியளித்தது.

இதனைவிட இரு மாதங்களுக்கு ஒரு தடவை சி.ஐ.டி.யில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், வெளிநாட்டு பயணம் தடை செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் பிணை உத்தரவில் அறிவித்தது.