வடக்கை வாட்டும் கடும் வரட்சி

முக்கிய செய்திகள் 1

19 மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள வரட்சி காலநிலையால் 12 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிகமானோர் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 284 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 49 ஆயிரத்து 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, கிழக்கு மாகாணத்தில் 72 ஆயிரத்து 989 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 63 ஆயிரத்து 527 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.