12 இலட்சம் பேரைப் பாதித்த வரட்சி

முக்கிய செய்திகள் 1

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 12 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வரட்சி காலநிலையால் வடமாகாணம் உள்ளிட்ட குருணாகலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள அதேவேளை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வரண்ட காலநிலையால் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.