நீதிமன்றம் செல்லவுள்ளது பெப்ரல்

முக்கிய செய்திகள் 2

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வரும் நிலையில், 20ஆவது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபைத் தேர்தல்களையும் பிற்போட முயற்சிக்கப்படுவதாக அறியமுடிகின்றது. இவ்வாறானதொரு முயற்சி முன்னெடுக்கப்படுமானால், அது தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பொன்றை மேற்கொள்ள வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல நேற்றுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.