07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை ஆதரிக்கத் தீர்மானம்

முக்கிய செய்திகள் 1

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் 66ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்ள சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும், அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.