மின்சார சபையின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு, ஜுன் 22

இலங்கை மின்சார சபையின்  தொழிற்சங்கங்களின்  அனைத்துத் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவை அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை நீடிப்பதாக கொழும்பு மாவட்ட நீதிவான் பூர்ணிமா பரணகம இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.