ஒரு நாள் தாமதமாகும் கப்பல்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, ஜூன் 23

92 ரக பெற்றோல் 40,000 மெட்ரிக் தொன்னுடன் இன்று (23) காலை இலங்கையை வந்தடைய இருந்த கப்பல் சுமார் ஒரு நாள் தாமதமாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர தன்னுடைய டுவிட்டர் பகுதியில் பதிவு ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றும் நாளையும் (24) நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் விநியோகமே இடம்பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.