பாடகர் திருமூர்த்திக்கு உதவிய கமல்

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

சென்னை, ஜுன் 23

மாற்றுத்திறனாளியான பாடகர் திருமூர்த்தி, இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக அவரை நேரில் சந்தித்த நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னை, மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது ‘விக்ரம்’ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். கமலின் தீவிர ரசிகரான இவர் இந்தப்படத்தை இயக்கியது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பிருந்தது.


இந்த படத்தில் கமலே எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட்டானது.

அனிருத் இசையில் வெளியான இந்தப்பாடலை அண்மையில் பார்வைத் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி பாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் கமல். மேலும் அவரை தனது இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ரகுமான் உறுதியளித்துள்ளார்.

திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக கமல் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.