எரிபொருள் தொடர்பில் ரஷ்யாவின் அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு, ஜுன் 23

எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் இலங்கை தரப்பினர் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும் பட்சத்தில் அதற்கு தனது அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெடெரி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து சாதகமான பதிலை ரஷ்ய அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் மற்றும் உரப் பிரச்சினை தொடர்பில் சாதகமான முறையில் ஆராய முடியும் என்ற போதிலும், இலங்கை தரப்பினர் இவ்விடயத்தில் சிறந்த தலையீட்டை மேற்கொள்ளவில்லை. எனவே இலங்கை தரப்பினர் இதனை விட பொறுப்புடனும் , அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால் தன்னாலும் இவ்விடயத்தில் நேரடி தலையீட்டினை வழங்க முடியும் என்றும் ரஷ்ய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.