காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

செய்திகள்

நாட்டை ஊடறுத்துச் செல்லும் காற்றின் வேகம் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாமென காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம் மன்னார், ஊவா மாகாணம் மற்றும் கேகாலை மற்றும் அவிசாவளை, மாதுருஓய மற்றும் பொத்துவில் முதலான பகுதிகளில் இந்தக் காற்றின் தாக்கம் இருக்கும் என்றும் காலநிலை அவதான நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.