அகதிகளுக்காக இலங்கை – இந்தியா இடையே மீண்டும் கப்பல் சேவை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கை - இந்தியாவிற்கு இடையில் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கொழும்பிற்கும் தூத்துக்குடிக்குமிடையிலான கப்பல் சேவையானது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த நிலையில் மீண்டும் குறித்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்பும் பட்சத்தில், அவர்களுக்கு வசதியாகவே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதுடன், இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு தமிழக அரசாங்கம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும், தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவையா அல்லது இராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் சேவையா அகதிகள் விரும்புகிறார்கள் என்று தீர்மானிப்பதற்கு முன்னர் மத்திய அரசுடன் கலந்துரையாட வேண்டியுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.