பொலித்தீன், பிளாஸ்டிக் தடையில் மாற்றமில்லை

முக்கிய செய்திகள் 1

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தடை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற பரிசீலனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானத்தை முறையாக மற்றும் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான பின்னணியை வகுக்கும் பொறுப்பு சுற்றாடல் அதிகார சபைக்கு காணப்படுவதாகவும், எஸ்பெஸ்டாஸ் மற்றும் புகையிலை தடை தொடர்பாக அரசாங்கம் செயற்படுகின்ற விதத்தில், சூழலை பேணுவதற்காக பாரிய சவாலான பொலித்தீன் சம்பந்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.