கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக அழிக்கப்படவில்லை

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

அமெரிக்கா, ஜுன் 30

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர, வைரஸ் முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் 110 நாடுகளில் மேலும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் BA 4 மற்றும் BA 5 ஆகிய மாறுபாடுகள் காரணமாகவே இவ்வாறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது கடினமான ஒன்றாக மாறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்து உலக நாடுகளும் தமது மக்கள் தொகையில் சுமார் 70 வீதமானவர்களுக்கேனும் கொரோனா தடுபூசியை செலுத்துமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts