வாஷிங்டன், ஜுன் 30
நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், மேட்ரிட் நகரில் நடந்த தலைவர்களுடனான கூட்டத்தில், நேட்டோவில் இவ்விரு நாடுகளும் இணைவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது. இதனை துருக்கியின் அதிபர் டயீப் எர்டோகன் வெளியிட்டுள்ளார். இதனால், நேட்டோ உறுப்பினர்களாக சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகள் இணைவதில் இருந்த துருக்கியின் எதிர்ப்பு விலகியது. இதற்கான முத்தரப்பு நாடுகளுடனான கையெழுத்து ஒன்றும் ஒப்பந்தம் ஆனது.
இதனை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துருக்கிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். இந்நிலையில் பைடன் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் தகுதி வாய்ந்த ராணுவங்களை கொண்ட வலிமையான ஜனநாயக நாடுகள். அவர்கள் நேட்டோவின் உறுப்பினராவது அதன் கூட்டு பாதுகாப்புக்கு வலிமை சேர்க்கும். இதற்காக சுவீடன், பின்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மேற்கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.