3 வயது குழந்தை மீன்தொட்டியில் வீழ்ந்து பலி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பன்வில , ஜுன் 30

பன்வில பகுதியில் மீன்தொட்டி ஒன்றில் தவறி வீழ்ந்து 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (29)இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்வில, மடுகலே பகுதியில் குறித்த குழந்தை தனது வீட்டின் முன்பகுதியில் இருந்த மீன்கள் வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் 2 1/2 அடி மீன்தொட்டியில் தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தையும் தாயும் வீட்டிலிருந்த நிலையில், வீட்டின் முன்பகுதியில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தவறி மீன் தொட்டியில் வீழ்ந்துள்ளது. சம்பவத்தின் போது குழந்தையின் 4 சகோதரர்களும் பாடசாலைக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.