கொழும்பு, ஜுலை 02
இலங்கைக்கு வரும் முதல் தொகுதி எரிவாயு விநியோகத்தை எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் வகையில் புதிய வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
100,000 மெற்றிக் தொன் எரிவாயுவில் முதல் தொகுதியான 30,000 மெற்றிக் தொன் எரிவாயுவில் 3,700 மெட்ரிக் தொன் எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
எரிவாயு விநியோகத்தின் போது நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நிறுவனங்களுக்கு விசேட முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்