வடகிழக்கில் புத்தர் சிலை எழுவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலை நிர்மாணிப்பது தொடர்பில் அமெரிக்க அரச திணைக்களம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரச திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான சுதந்திரம் என்ற அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பௌத்த தேரர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த குழுக்கள் மற்றும் இராணுவத்தினரால் வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு ஏகாதிபத்தியக் கொள்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற அமைப்புகள், அரசியல்வாதிகளினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்கள் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தம் எனவும், சிறிய அளவிலான பௌத்தர்களுக்காக புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரச திணைக்களம் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.