குடாநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காற்றுடன் மழை!

செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் மழையுடன், பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஊடாக விஷேடமாக மேல், வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களிலும் ஓரளவு கடும் காற்றினை எதிர்பார்க்க முடியுமென திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ, மத்திய மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும். மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்திலும், யாழ் மாவட்டத்திலும் மழை பெய்யும் எனவும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களிலும் ஓரளவு அடைமழையினை எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் எனவும், மணிக்கும் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரிக்க கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.