வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,ஜுலை 05

வட மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் செயற்பாடுகள் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று (5) முதல் இந்த நடைமுறை அமுலாகவுள்ளதாக வடமேல் மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மாத்திரம் வாகன வருமான உத்தரவு பத்திரம் விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரவித்துள்ளார்.