ரஷ்ய விமானம் தொடர்பான வழக்கின் உத்தரவுக்கு திகதியிடப்பட்டுள்ளது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,ஜுலை 05

அண்மையில் ரஷ்யாவின் எரோஃப்ளோட் விமானம் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுத்து உத்தரவு பிறப்பிப்பதற்கு ஏதுவாய் அமைந்த வழக்கை, நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை தொடர்பான உத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளது.

குறித்த வழக்கு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போது கொழும்பு வணிக மேல்நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அயர்லாந்து நிறுவனமொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் சுமதி தர்மவர்தனவினாலும் பிரதிவாதி தரப்பான ரஷ்ய நிறுவனத்தினாலும் இன்று சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

அவற்றை பரிசிலீத்த கொழும்பு வணிக மேல்நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அயர்லாந்து நிறுவனத்தினால், தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கடந்த மாதம் 2 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்த கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதித்தார்.

பின்னர், சட்டமா அதிபரினார் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராயந்த கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் அந்த தடை உத்தரவை கைவிடுமாறு ஆணையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.