சீன மக்களின் தனிநபர் தரவுகள் திருடப்பட்டு இணையத்தில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

சீனா,ஜுலை 05

சீன மக்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் சில தனி நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இவ்வாறு திருடப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 7 இலட்சத்து 50 ஆயிரம் சீன மக்களின் பெயர்கள், தொலைபேசி இலக்கங்கள், அடையாள அட்டை இலக்கங்கள், பிறந்த திகதி உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்கள் மாதிரிக்காக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தனிநபர் தகவல்கள் 2 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், முக அடையாள தரவுகள் மற்றும் மக்கள் சனத்தொகை தொடர்பான தகவல்கள் ஆகியனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.