சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இணங்க போவதில்லை: ஜனாதிபதி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு,ஜுலை 055

நாட்டை வீழ்ச்சி நிலையிலிருந்து மீட்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட செவ்வாய்க்கிழமை (05) கலந்துரையாடலில் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில,  அவ்வாறான சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு தாம் இணங்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தமக்கு அறிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஏற்பாட்டில் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இன்று  நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சர்வதேசத்தின் நம்பிக்கையையும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நம்பிக்கையையும் பெறுவதற்கு சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.