இலங்கையில் மீண்டும் கொரோனா தலைதூக்கும் அபாயம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு,ஜுலை 05

இலங்கையில் மீண்டும் கொவிட்-19 தலைதூக்கும் அபாயம் உள்ளதால், கொவிட்-19 எதிர்ப்புத் தடுப்பூசியின் நான்கு டோஸ்களையும் பெற்றுக்கொள்வது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய வகைகளுடன் மீண்டும் கொவிட்-19 பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் நான்காவது டோஸ் தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அசேல குணவர்தன தெரிவித்தார்.