பதவி விலகும் பொரிஸ் ஜோன்சன்

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

லண்டன், ஜுலை 07

பிரித்தானிய  பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய அமைச்சர்கள் தொடர்ச்சியாக பதவி விலகி வரும் நிலையில் அவர் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் பிரித்தானிய பிரதமர் ஆகிய பதவிகளுக்கு புதிய நபர் தெரிவு செய்யப்படும் வரை அவர் பிரித்தானிய  பிரதமராக குறுகிய காலத்திற்கு நீடிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Trending Posts